குட்டியுடன் வலம் வரும் காட்டு யானை: பயணிகள் ரசிப்பு
குட்டியுடன் வலம் வரும் காட்டு யானை: பயணிகள் ரசிப்பு
குட்டியுடன் வலம் வரும் காட்டு யானை: பயணிகள் ரசிப்பு
ADDED : மே 11, 2025 11:35 PM

மூணாறு; மாட்டுபட்டியில் முகாமிட்ட தாய் யானை, குட்டியானை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலாப் பகுதியாகும். அங்கு அரசு சார்பில் மாட்டு பண்ணை உள்ளது. அங்குள்ள பசுக்களுக்கு பண்ணையை சுற்றிலும், அணையின் கரையோரமும் 600 எக்டேரில் புல் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
அதனால் ஆண்டு முழுவதும் புல் மேடுகள் பசுமையாக காணப்படும். அங்கு தீவனத்திற்காக காட்டு யானைகள் நாள் கணக்கில் முகாமிடும். தற்போது குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானை புல்மேடுகளில் சுற்றித் திரிகின்றன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


