நவல்குந்தில் இன்று அரசு விழா முதல்வர், அமைச்சர்கள் வருகை
நவல்குந்தில் இன்று அரசு விழா முதல்வர், அமைச்சர்கள் வருகை
நவல்குந்தில் இன்று அரசு விழா முதல்வர், அமைச்சர்கள் வருகை
ADDED : பிப் 24, 2024 05:34 AM
தார்வாட், : பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க, முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் இன்று தார்வாடின், நவல்குந்துக்கு வருகை தருகின்றனர்.
தார்வாடின், நவல்குந்த் சட்டசபை தொகுதியில், வெவ்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கவுள்ளது.
நவல்குந்தின், மாடல் உயர்நிலை பள்ளி மைதானத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், பணிகள் அடிக்கல் நாட்டு, ஏற்கனவே முடிந்த பணிகளின் திறப்பு, வாக்குறுதி திட்டங்களின் மாநாடு உட்பட, பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு நடக்கின்றன.
முதல்வர் சித்தராமையா, இன்று மாலை 4:00 மணிக்கு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், ஜார்ஜ், பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.