ஆம்னி பஸ்- கார் மோதி விபத்து: தீப்பற்றியதில் 5 பேர் பலி
ஆம்னி பஸ்- கார் மோதி விபத்து: தீப்பற்றியதில் 5 பேர் பலி
ஆம்னி பஸ்- கார் மோதி விபத்து: தீப்பற்றியதில் 5 பேர் பலி
ADDED : பிப் 12, 2024 03:12 PM

லக்னோ: உ.பி மாநிலத்தில் ஆம்னி பஸ் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது.
ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. பின்னால் வந்த கார் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் மற்றும் கார் தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். காரில் இருந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.