ஆணாக மாறிய பெண் ஐ.ஆர்.எஸ்.,அதிகாரிக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி
ஆணாக மாறிய பெண் ஐ.ஆர்.எஸ்.,அதிகாரிக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி
ஆணாக மாறிய பெண் ஐ.ஆர்.எஸ்.,அதிகாரிக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி
ADDED : ஜூலை 10, 2024 01:04 AM

ஐதராபாத்: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐ.ஆர்.எஸ்., அதிகாரியின் கோரிக்கையை ஏற்று அவரது பணி பதிவேட்டில் ஆணாக பெயர், பாலினத்தை மாற்றிட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியது.
எம். அனுஷ்யா என்ற 35 வயது பெண் ஐ.ஆர்.எஸ். அதிகாரி, மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணியாற்றி தற்போது ஐதராபாத்தில் சுங்க வரி மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது தன் பெயரை அனுஷ்யா என்பதற்கு பதிலாக அனுகதிர் சூர்யா என பாலினத்தை ஆணாக தனது பணி பதிவேடுகளில் மாற்றிட மத்திய நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
மத்திய நிதி அமைச்சகம் அவரது கோரிக்கையை ஏற்று அவரது அனைத்து பணி பதிவேடுகளில் அனுஷ்யா என்ற பெயரை அனுகதிர்சூர்யா என பெயர் மாற்ற அனுமதித்தது.
இது போன்ற சம்பவம் மத்திய அரசு பணி வரலாற்றில் நடந்துள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.