சீருடை மாதம் ஜனவரி பி.எம்.டி.சி., உறுதி
சீருடை மாதம் ஜனவரி பி.எம்.டி.சி., உறுதி
சீருடை மாதம் ஜனவரி பி.எம்.டி.சி., உறுதி
ADDED : ஜன 01, 2024 06:29 AM
ஹாசன்: 'பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிப்போருக்கு, சிறப்பான போக்குவரத்து வசதியை அளிக்கவும், பி.எம்.டி.சி., மீது நல்ல கருத்துகள் ஏற்படும் வகையிலும், ஜனவரி மாதத்தை முழுமையான சீருடை மற்றும் வழித்தட பலகை பொருத்தும் மாதம்,' என கொண்டாட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட சுற்றறிக்கை:
பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் சிலர் சீருடை அணிவதில்லை. பல பஸ்களில் வழித்தடம் அறிவிப்பு பலகை இல்லை. எந்த பஸ் எந்த வழித்தடங்களில் செல்கிறது என்பது தெரியாமல், பயணியர் அலைபாய்கின்றனர்.
இந்த குளறுபடிகளை சரி செய்து, மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கவும், ஜனவரி மாதம் முழுமையான சீருடை மற்றும் வழித்தடம் பலகை பொருத்தும் மாதமாக கொண்டாடப்படும்.
இந்த மாதம் முழுதும், பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள் நிர்ணயித்த சீருடை அணிந்து, பணியாற்ற வேண்டும். பேட்ஜ், பெல்ட், ஷூ அணிய வேண்டும். பஸ்களில் வழித்தட அறிவிப்பு பலகை பொருத்த வேண்டும்.
பி.எம்.டி.சி.. நிர்வாக இயக்குனரின் உத்தரவுபடி, சீருடை அணிந்து, வழித்தடம் அறிவிப்பு பலகை பொருத்தி, திட்டத்தை வெற்றி கரமாக்கும், 240 ஊழியர்களுக்கு தலா 500 ரூபாய் பரிசளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.