Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/12 மொழிகளில் புத்தகங்கள் எழுத எழுத்தாளர்களுக்கு யு.ஜி.சி., அழைப்பு

12 மொழிகளில் புத்தகங்கள் எழுத எழுத்தாளர்களுக்கு யு.ஜி.சி., அழைப்பு

12 மொழிகளில் புத்தகங்கள் எழுத எழுத்தாளர்களுக்கு யு.ஜி.சி., அழைப்பு

12 மொழிகளில் புத்தகங்கள் எழுத எழுத்தாளர்களுக்கு யு.ஜி.சி., அழைப்பு

ADDED : ஜன 13, 2024 07:37 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'இளங்கலை படிப்புகளுக்கான கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் புத்தகங்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 12 மொழிகளில் எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்'

என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.இதற்காக உயர்க்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டோருக்கு யு.ஜி.சி., அழைப்பு விடுத்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக இந்திய மொழிகளில்

கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து யு.ஜி.சி., யின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இளங்கலை படிப்புகளுக்கான கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் புத்தகங்களை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது, பெங்காலி, மராத்தி, அசாமிஸ் ஆகிய 12 இந்திய மொழிகளில் வழங்க யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களில், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். புத்தகங்கள் எழுத விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பும் பாடப்பிரிவு, மொழி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு வரும் 30ம் தேதிக்குள், https://www.ugc.gov.in/Notices என்ற தளத்தில்

விண்ணப்பிக்கலாம் என யு.ஜி.சி., அறிவுறுத்திஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us