அசாமில் லாரி - பஸ் மோதல்: 12 பேர் பலி; 25 பேர் படுகாயம்
அசாமில் லாரி - பஸ் மோதல்: 12 பேர் பலி; 25 பேர் படுகாயம்
அசாமில் லாரி - பஸ் மோதல்: 12 பேர் பலி; 25 பேர் படுகாயம்
UPDATED : ஜன 03, 2024 10:35 AM
ADDED : ஜன 03, 2024 10:10 AM

கவுகாத்தி: அசாமில் பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
அசாம் மாநிலம் அதுஹெல்யா நகரில் இருந்து பலிஜன் நகருக்கு 45 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். இன்று கொலாகாட் மாவட்டத்தில் உள்ள பலிஜன் அருகே சென்றபோது, மார்கரிடா பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.