மூடுபனியில் சிக்கியுள்ள டில்லி சாலைகளில் போக்குவரத்து குறைந்தது
மூடுபனியில் சிக்கியுள்ள டில்லி சாலைகளில் போக்குவரத்து குறைந்தது
மூடுபனியில் சிக்கியுள்ள டில்லி சாலைகளில் போக்குவரத்து குறைந்தது

பஞ்சாப், ஹரியானா
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நேற்றும் கடுங்குளிர் நிலவியது. பல இடங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழ் சரிந்தது. ஹரியானா மாநிலம் நர்னால் நகரில் நேற்று, வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானிலும் கடுங்குளிர் நிலவுகிறது. அல்வார் மற்றும் கரவுலி ஆகிய நகரங்களில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. தோல்பூர் - 4.5, ஜலோர் - 5.6, ஸ்ரீகங்காநகர் - 6.2, சிரோஹி மற்றும் பதேபூர் - 6.3, பிலானி - 6.4, ஜெய்ப்பூர் - 8.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பிஷுன்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுதும் கடுங்குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர்
வடக்கு காஷ்மீர் குரேஸ் மற்றும் லடாக்கின் திராஸ் ஆகிய இடங்களில் லேசான பனிப்பொழிவு இருந்தது. ஆனால் பனி குவியவில்லை.


