Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : ஜன 07, 2024 02:42 AM


Google News
ஆன்மிகம்

திருப்பாவை சொற்பொழிவு

சாய்பாபா நகர் பொது நல சங்கம் சார்பில் 38 ம் ஆண்டு ஆண்டாள் திருப்பாவை சொற்பொழிவை ஒட்டி, ஆண்டாள் அருளிய திருப்பாவை தொடர் பாடல்கள் பாடப்படுகிறது. சொற்பொழிவாளர்: கே.பிரகாஷ். நேரம்: காலை 10:00 மணி. இடம்: சங்க மண்டபம், சாய்பாபா நகர், ஒன்பதாவது பிரதான சாலை, ஸ்ரீராமபுரம்.

தனுர் மாத பூஜைகள்

தனுர் மாத பூஜையை ஒட்டி, பல கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது.

நேரம்: காலை 5:00 மணி: நடை திறப்பு; 5:30 மணி: அபிேஷகம்; 6:50 மணி: தீபாராதனை; 7:00 மணி: பிரசாதம் வினியோகம். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

நேரம்: காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை திருப்பாவை பாராயணம், சாத்துமுறை, ஆரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம். இடம்: பான்பெருமாள் கோவில், ஹலசூரு

நேரம்: காலை 5:00 மணி: நடை திறப்பு; 5:45 மணி: அபிேஷகம்; 6:00 மணி: திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்; 7:00 மணி: தீபாராதனை; 8:15 மணி: சிறப்பு பூஜைகள்; 9:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

நேரம்: காலை 4:30 மணி முதல், தங்கவயலில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் 30 நாட்களுக்கு தமிழில் திருப்பாவை, திவ்விய பிரபந்தம் ஓதுதல், தீபாராதனை, பிரசாத வினியோகம்.

நேரம்: அதிகாலை 4:00 மணி: நடை திறப்பு; 4:30 மணி: அபிேஷகம்; 5:30 மணி: தீபாராதனை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரா கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

நேரம் :காலை 5:30 மணி: நடை திறப்பு; 6:00 மணி: அபிேஷகம், சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்கல்; 11:00 மணி: நடை அடைப்பு. இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

நேரம்: காலை 4:00 மணி: நடை திறப்பு; 5:00 மணி: சிறப்பு அபிேஷகம், பூஜைகள், தீபாராதனை; காலை 9:00 மணி: நடை அடைப்பு. இடம்: நாகேஸ்வரா கோவில், பேகூர்.

நேரம்: அதிகாலை 4:30 மணி: சுப்ரபாதம்; 6:30 மணி: திருப்பாவை எழுச்சி; 8:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: திருவேங்கடா ராமானுஜர் சன்னிதி ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.

நேரம்: காலை 7:00 மணி திருப்பாவை பாசுரம்; 9:00 மணி: தீபாராதனை. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னதி, திம்மையா சாலை, பாரதி நகர், பெங்களூரு.

அய்யப்பா பூஜை

ஸ்ரீ அய்யப்பா பக்த சமிதி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜை; மதியம் 12:30 மணி: அன்னதானம். இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சுப்பையனபாளையா, பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.

சாஸ்தா பிரீத்தி

தர்மசாஸ்தா சேவா மண்டலி சார்பில் 20ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி விழா கொண்டாடப்படுகிறது. நேரம்: அதிகாலை 5:00 மணி: மஹா கணபதி ஹோமம்; 7:30 மணி: பிரதோஷம் பூஜை கமிட்டியின் அனந்த நாராயணனின் மஹன்யாச பூர்வக ருத்ராபிேஷகம் கிராமார்ச்சனை; 10:30 மணி: ஹரிஹர புத்ரா சஹஸ்ரநாம அர்ச்சனை; 11:30 மணி: அனந்த பாகவதரின் சாஸ்தா பிரீத்தி, சுவாமி வரவு பாட்டு; மதியம் 1:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: சீதா ராமா கல்யாண மண்டபம்; உத்தம் சாகர் அருகில், பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.

ஜல் வாயு விஹார் அய்யப்ப சேவா சமிதி சார்பில் 15ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி விழா. நேரம்: அதிகாலை 5:30 மணி: கணபதி ஹோமம், ருத்ராபிேஷகம்; 6:00 மணி: பக்த ஜான சேவா சங்கம் சார்பில் சூர்யநமஸ்காரம்; 8:30 மணி: அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை; 9:30 மணி: சம்ரத் மஞ்சாபுரா மோகன் பாகவதர் குழுவினரின் அய்யப்ப பஜனை; மதியம் 1:00 மணி: மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு அன்னதானம். இடம்: கோதண்டராமா சமுதாய பவன், ஸ்ரீராமர் கோவில் வளாகம், இஸ்கான், காச்சரகானஹள்ளி.

பொது

ஓவிய கண்காட்சி

கர்நாடகா சித்ரகலா பரிஷத் சார்பில் இன்று 21வது ஓவிய கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி. இடம்: குமாரகிருபா சாலை, பெங்களூரு.

சிறுதானிய கண்காட்சி

கர்நாடகா விவசாய துறை சார்பில் ஐந்தாவது சர்வதேச சிறுதானிய கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 11:00 மணி: இடம்: திரிபுரவாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.

வாக்கத்தான்

சமர்தா பாரதா சார்பில் வாக்க்தான் நடக்கிறது. நேரம்: காலை 7:30 மணி. இடம்: கப்பன் பூங்கா, காபி டே ஸ்கொயர் எதிரில், பெங்களூரு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us