கடை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது
கடை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது
கடை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 08:49 PM
புதுடில்லி:டில்லியின் முஸ்தபாபாத் என்ற இடத்தில், கடை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
முஸ்தபாபாத் என்ற நகரில் கடை வைத்திருக்கும் ஷாகிர், 27, என்பவருக்கும், சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில், தன் கடை மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, அவர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். பின், அனஸ், 21, ஜீஷா, 21, மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர்.
மூவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தான், ஷாகிர் கடை மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், ஷாகிருக்கும், கைதாகியுள்ள மூவருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. சமூக ஊடகத்தில் பதிவிட்டது தொடர்பாக, சமீப காலமாக மோதல் ஏற்பட்டது.
அதனால் ஏற்பட்ட கோபத்தில், அவர் கடை மீது துப்பாக்கியால் சுட்டதாக, மூவரும் போலீசில் தெரிவித்தனர். போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.