மார்ச் 15ல் ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
மார்ச் 15ல் ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
மார்ச் 15ல் ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு
ADDED : மார் 13, 2025 08:29 PM

புதுடில்லி: ஹோலி பண்டிகை காரணமாக, மார்ச் 15ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஹிந்தி தேர்வை எழுத முடியாத சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு எழுத மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ., வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் 14ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில், மார்ச் 15ம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று எங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.
இந்த கருத்துக்களைப் பெற்ற பிறகு, அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் என்றாலும், தேர்வெழுத சிரமப்படும் மாணவர்கள் பின்னர் ஒரு தேதியில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சன்யம் பரத்வாஜ் கூறினார்.