அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகள் திருடும் திருடர்கள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகள் திருடும் திருடர்கள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகள் திருடும் திருடர்கள்
ADDED : ஜன 11, 2024 03:43 AM
மஹாதேவபுரா: நகரில் காவலாளிகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள காலணிகளை திருடும் திருடர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பைக், கார், மொபைல் போன் திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகின்றன.
ஆனால் விதவிதமாக திருடும் கும்பல்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அணியும் விலை உயர்ந்த காலணிகளை, வீட்டின் வாசலில் விடுகின்றனர். இதை நோட்டம் விடும் திருடர்கள், குறிப்பாக, காவலிகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகளை திருடுகின்றனர்.
இதுபோன்று, மஹாதேவபுராவிலும் அடுக்குமாடி குடியிருப்பில் விலை உயர்ந்த காலணிகளை திருடிச் செல்லும் இரு திருடர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்போர், மஹாதேவபுரா போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அவர்கள் விசாரிக்கின்றனர்.