நீரா பானம் குடித்தும் போதை ஏறவில்லை துணை முதல்வர் வெளியிட்ட ரகசியம்
நீரா பானம் குடித்தும் போதை ஏறவில்லை துணை முதல்வர் வெளியிட்ட ரகசியம்
நீரா பானம் குடித்தும் போதை ஏறவில்லை துணை முதல்வர் வெளியிட்ட ரகசியம்
ADDED : பிப் 24, 2024 04:52 AM
பெங்களூரு : ''நீரா பானம் குடித்தும், எனக்கு போதை ஏறவில்லை,'' என்று, சட்ட மேலவையில் துணை முதல்வர் சிவகுமார், ரகசியத்தை வெளியிட்டார்.
கர்நாடகா சட்ட மேலவையில், காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் பேசுகையில், ''நீரா பானத்திற்கு அரசு தடை விதித்து இருப்பதால், அந்த தொழிலை நம்பி இருக்கும் பலர் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய, அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா,'' என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி: நமது துணை முதல்வர் நீரா பானம் குடித்து உள்ளாரா?
(இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது)
துணை முதல்வர் சிவகுமார்: ஆமாம், நான் 35 ஆண்டுகளுக்கு முன்பு, நீரா பானம் குடித்தேன். ஆனாலும் எனக்கு போதை ஏறவில்லை.
கோட்டா சீனிவாஸ் பூஜாரி: நானும் நீரா குடிக்க விரும்பினேன். ஆனால் குடித்து முடித்துவிட்டு என்னை கையாள முடியும் என்ற நம்பிக்கை இல்லை. உங்களை போல உடல்ரீதியாக இருந்திருந்தால், நான் தைரியமாக குடித்து இருப்பேன்.
பா.ஜ., உறுப்பினர் தேஜஸ்வினி: நீரா பானம் குடித்த அனுபவம் பற்றி, துணை முதல்வர் சிவகுமார், நீரா டைரிஸ் எழுதலாம்.
(இதை கேட்டதும் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது)
கோட்டா சீனிவாஸ் பூஜாரி: நீரா பானத்தை நம்பி இருந்த சமூகம், தற்போது மோசமான நிலையில் உள்ளது. நீரா மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.