ADDED : ஜன 11, 2024 03:37 AM
மாண்டியா: மாண்டியாவை சேர்ந்த மாணவி காவ்யா ஸ்ரீ, பாரதி நகரில் உள்ள பள்ளியொன்றில் படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து, வீடு திரும்பும் நோக்கில் மாண்டியா செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ஏறினார்.
பெண் நடத்துனர் சவுபாக்யா வயதான தோற்றத்தில் தென்பட்டதால், மாணவி காவ்யாஸ்ரீ, 'பாட்டி டிக்கெட் கொடுங்கள்' என கேட்டார். இதனால் கோபமடைந்த நடத்துனர் சவுபாக்யா, 'நான் பாட்டி போன்று தென்படுகிறேனா' என, கேள்வியெழுப்பி மாணவியின் கன்னத்தில் அறைந்தார்.
அங்கேயே பஸ்சை நிறுத்தும்படி கோரிய மாணவி, நேராக பாரதிநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடத்துனர் மீது புகார் அளித்தார். மொபைல் போன் மூலமாக தன் பெற்றோரிடம் தகவல் கூறினார்., உறவினர்களும் போலீஸ் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தினர். நடத்துனர் சவுபாக்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.