Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/விபத்துக்கு காரணம் மொபைல் போன்; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

விபத்துக்கு காரணம் மொபைல் போன்; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

விபத்துக்கு காரணம் மொபைல் போன்; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

விபத்துக்கு காரணம் மொபைல் போன்; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

ADDED : ஜன 31, 2024 07:39 AM


Google News
பெங்களூரு : 'பெங்களூரில் சாலை விபத்துகள் அதிகரிக்க, மொபைல் போன் பயன்படுத்துவதே காரணம்' என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. எனவே விபத்துகள் நடப்பது சகஜம். ஆனால் நடைபாதையில் நடந்து செல்வோர், விபத்தில் உயிரிழக்கின்றனர்.

போக்குவரத்துத் துறை போலீசாரின் புள்ளி விபரங்களின்படி, வாகன விபத்துகளை விட, பாதசாரிகள் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்தாண்டு 247க்கும் அதிகமான பாதசாரிகள் உயிரிழந்தனர். இத்தகைய விபத்துகளுக்கு, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதே காரணம் என, கூறப்படுகிறது.

இது தொடர்பாக, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்மார்ட் போன் பயன்படுத்தியபடி, மக்கள் சாலையை கடக்கின்றனர். மொபைல் போனில் பேசியபடி, வீடியோ பார்த்தபடி, வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முற்படுகின்றனர். இது விபத்துக்கு காரணமாகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துகள் குறித்து மக்களுக்கு, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தற்போது பலரும் மொபைல் போனுக்கு, அடிமையாக உள்ளனர். இதில் இருந்து அவர்கள் வெளியே வரவில்லை. அதிகமான மொபைல் போன் பயன்பாடு, மக்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாகனங்களில் செல்வோர், மொபைல் பயன்படுத்தக் கூடாது என, அரசு தடை விதித்துள்ளது. அதேபோன்று, சாலையில் நடமாடும்போது, மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிப்பது நல்லது. மொபைல் போனுக்கு அடிமையாக இருப்பது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மனநலன் பாதிப்படையும்.மக்கள் விழித்துக்கொள்வது நல்லது.

- மஞ்சுநாத், மனநல வல்லுனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us