Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'பி' மார்க் கருத்து கணிப்பு அறிக்கை ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தகவல்

'பி' மார்க் கருத்து கணிப்பு அறிக்கை ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தகவல்

'பி' மார்க் கருத்து கணிப்பு அறிக்கை ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தகவல்

'பி' மார்க் கருத்து கணிப்பு அறிக்கை ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தகவல்

ADDED : பிப் 24, 2024 11:05 PM


Google News
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள், தயாராகும் நிலையில் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மாநிலத் தலைவர்களுக்கு, காங்கிரஸ் மேலிடம் 'டார்கெட்' கொடுத்துள்ளது. இதை செயல்படுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் தயாராகின்றனர்.

சட்டசபை நாளை முடிவடையும். அதன்பின் தேர்தல் பிரசாரம் துவங்கி சூடுபிடிக்கும்.

இந்நிலையில் 'பி மார்க்' நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு, நேற்று வெளியானது. கர்நாடகாவின் 28 தொகுதிகளில், எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என, விவரிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, 23 முதல் 25 தொகுதிகள், காங்கிரஸ் இரண்டு முதல் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில், காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி இருக்கும்.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி, 55 சதவீதம் ஓட்டுகள், காங்கிரஸ் 39 சதவீதம் ஓட்டுகளை பெறும்.

சாம்ராஜ்நகர், பல்லாரி, கோலார் லோக்சபா தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி - மார்க் ஆய்வறிக்கை, எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

ஆளுங்கட்சி காங்கிரசாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. 20 தொகுதிகளை பிடிக்க, அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us