ADDED : ஜன 29, 2024 07:12 AM
பயனில்லா கேமராக்கள்!
ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கமான நகரின் முக்கிய இடங்களில் 360 டிகிரி சுழலும் ரகசிய கேமராக்களை நிறுவினாங்க. திருடர்கள், திருட்டு காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாவதில்லையாம். எளிதாக கண்டறிய முடிவதில்லையாம்.
சுழலாமல் ஸ்டெடி கேமரா ஒரு திசையில் இயங்கினால் தான் துல்லியமாக காட்சிகள் பதிவாகும். இதனால் சுழலும் கேமராக்களால் பயனே இல்லை என விஷயம் தெரிந்த காக்கி காரர்களே தெரிவிக்கிறாங்க.
இது ஒரு புறம் இருக்க, பல இடங்களில் கேமராக்கள் இயங்குவதே இல்லை. இதை ரிப்பேர் செய்யாமல் இருக்காங்க.
கோல்டு சிட்டியில் உள்ள எல்லா கடைகளிலும் கேமராக்கள் வைக்க வேணும்னு உத்தரவு இருக்குது. ஆனால் 60 சதவீதம் பேர் கேமரா வைக்கவே இல்ல. பெருசா பாதிப்பு, ஆபத்து ஏற்பட்டால் தான் கவனிப்பாங்களோ.
கோவில் நிதி 'லபக்?'
கோவில்களை பராமரிக்க தொகுதி தோறும் ஆராதனா கமிட்டின்னு உள்ளது. இந்த திட்டத்தில் கோல்டு நகரில் இருபது ஆண்டுகளில் எந்தெந்த கோவிலை புதுப்பித்தாங்கன்னு கேட்டால், கணக்கில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், எங்கே, எப்போது செலவழிச்சாங்களோ.
இதனாலை கோவில் புனரமைத்த விபரங்கள் வேணும்னு தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கடிதம் போயிருக்குதாம்.
பொன் நகரில் அதிக வருமானம் உள்ள கோடி லிங்... கோவிலை அரசுடமை ஆக்கல. ஆனால் வருமானமே இல்லாத பல கோவில்களை மட்டுமே அரசு பட்டியலில் வச்சிருக்காங்க.
சிதிலமடைந்த பல கோவில்களை புதுப்பிக்க ஆராதனா கமிட்டிக் காரங்க முயற்சி மேற்கொள்வாங்களா.
மந்திரி பதவி ஆசைக்கு ஆப்பு?
கைவினை தொழில் மேம்பாட்டு வாரிய தலைவராக கோல்டன் சிட்டி அசெம்பிளிக் காரருக்கு 'சான்ஸ்' கொடுத்திருக்காங்க. இது மந்திரிக்கு உரிய பதவின்னு சொல்லி, 'ஆப்' செய்திட்டாங் களோ.
இதை விட பெரிய, நடுத்தர அல்லது சிறுதொழில் வளர்ச்சி துறையை மேம்படுத்தும் பதவியை கொடுத்து இருந்தால், கோல்டு சிட்டிக்குள் தொழிற் சாலைகளை உருவாக்குவதில் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
நவீன தொழில் நுட்ப இயந்திர வேலைகள் செய்யும் பல தொழிற்சாலைகள் வரும்னு தான் கோல்டு சிட்டியின் கனவாக இருக்குது. இந்த கனவுகளுக்கு கைவினை தொழிலும் கூட உதவிடுமா.