ADDED : ஜன 12, 2024 11:09 PM
சுகாதார சீர்கேடு தீராதோ?
தேசிய அளவில் ஸ்வெச் சர்வேக் ஷன் திட்டத்தில் 45 நகரங்கள் இடம் பெற்றதில் அனைத்து வசதிகளும் உள்ள மாநில கேபிடல் சிட்டி 43 வது ரேங்க்குக்கு மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
அப்படின்னா, 35 வார்டுகள் உள்ளன பொன்னான சிட்டியில் மைனிங் பகுதியில் உள்ள 17 வார்டுகளில் பினாயில், கொசுக்கள் ஒழிக்க மருந்து தெளிப்பு, கால்வாய், பொதுக் கழிப்பறைகள் எதையுமே துப்புரவு செய்வதே இல்லை. இன்னும் கூட பலர் திறந்த வெளிகளை பயன்படுத்தி வராங்களே, இதன் தகுதி தரம் எந்த பட்டியலில் எத்தினாவது இடத்தில் சேருமோ?
இதுவரையில் மைன்ஸ் குடியிருப்பு பகுதியில் முனிசி., ஆபிசர்கள் வந்து பார்வையிட்டதே இல்லை. இப்பகுதியின் சுகாதார சீர்கேடு கொடுமைகளை கவனிக்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் இதனை கண்டுக் கொண்டதே இல்லையென பலரது வருத்தமாக இருக்குது.
மாநில அரசு நகர வளர்ச்சிக்கு 35 வார்டுகளுக்கும் தான் நிதி வழங்குறாங்க. ஆனால், மைன்ஸ் பகுதியின் 17 வார்டுகளை மட்டும் தீண்டபடாதவர்களா நினைக்குறாங்களான்னு அதிருப்தி ஏற்பட்டிருக்குது. இங்கு குடியிருக்கும் வீடுகளில் வசிக்கிறவங்க வரி செலுத்த தயார். ஆனால் அந்த வீடுகளை சொந்தம் ஆக்கலையே. இதுக்கு எப்போ விமர்சனம் கிடைக்க போகுதோ?
பாதுகாப்புக்கு பல கோடி நிதி வீண்?
தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் 15,000 வீடுகள் இருப்பதாக நகராட்சி பட்டியலிலும், சுரங்க நிர்வாகத்திலும் இதன் பட்டியல் இருக்குது. இருந்தும், 3,200 தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கிற வீடுகளை மட்டுமே பலமுறை சர்வே செய்தாங்க. வீட்டுரிமை பட்டா வழங்குவதாக சொல்லி வந்தாங்க. ஆனால் பொசிஷன் சர்ட்டிபிகேட் மட்டுமே வழங்கினாங்க.
அதிலும் அரசியல் ஆதாயத்துக்காக 40 பேருக்கு மட்டுமே பொசிஷன் சர்ட்டிபிகேட்டை கொடுத்து மற்றவர்களுக்கு கொடுக்காமல் நிறுத்திட்டாங்க. எந்த வீட்டில் யார் யார் இருக்காங்க என்ற விபரம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையிலேயே இருக்கும்போது, இந்த பொசிஷன் சர்ட்டிபிகேட் எதுக்காகன்னு தெரியல.
பொசிஷன் சர்ட்டிபிகேட் தருவதை விட வீட்டுரிமை பட்டாவை வழங்கி இருக்க வேண்டுமே தவிர, இதென்ன நாடகமோ என்று தெரியலயாம். மூடப் பட்ட சுரங்க நிறுவனத்துக்கு மத்திய அரசு பல கோடிகளை பராமரிப்புக்காக நிதியை வழங்கி வராங்க. ஆனால் அதன் சொத்துக்கள் பராமரிக்க படுகிறதா. அல்லது கொள்ளைப் போகிறதா என்பதையும் கவனிக்க புலனாய்வு துறை விசாரணை செய்ய வேண்டும் என்று உண்மை தெரிந்த வட்டாரம் டெல்லிக்கு தகவல் அனுப்பி இருக்காங்க.
மாற்றம் எப்போ ஏற்படுமோ?
கோலார் மாவட்டத்திலும் கை , தாமரை, புல்லுக்கட்டு ஆகிய மூன்று கட்சிகளும் லோக், தேர்தலில் பரபரப்பா இருக்காங்க. ஆனால், கோல்டு சிட்டியின் லோக்கலில் ஒரு கட்சியிலும் இதில் போட்டிப் போட 'சீட்' கேட்கிறதுக்கு ஆளை காணோம்.
எப்படியும் வேட்பாளர்கள் வெளியிடத்தில் இருந்து தான் வரப்போறாங்க. எதுக்கு தலையை பிய்த்துக்க வேணும்னு கட்சிகளை சேர்ந்தவங்க கம்முன்னு இருக்காங்க.
கோலார் லோக் தொகுதியில் 8 அசெம்பிளி தொகுதிகளில் பொன்னான நகரமும் அதில ஒண்ணு தான். ஆனால் எந்த ஒரு தேசிய கட்சியும் நாடு சுதந்திரம் அடைஞ்சதில் இருந்து இந்த ஒரு தொகுதியை சேர்ந்தவருக்கு இதுவரைக்கும் சீட் கொடுத்ததே இல்லை.
வெளி தொகுதியில் இருந்து வருவாங்க. அவங்கள 'கட்சி வெறியில்' ஜெயிக்க வைக்க மல்லுக் கட்டுவாங்க. அதேபோல தான் இம்முறையும் கூட நடக்க போகுது. வந்தவர்களை எல்லாம் வரவேற்கிற அப்பாவிகள் உள்ள இடம் இதுவாகத் தான் இருக்கும்.
லோக்சபா மட்டுமல்ல அசெம்பிளிக்கும் கூட இந்த மூன்று கட்சி களிலும் உள்ளூருக் காரருக்கு சீட் இல்லை என்கிற புதிய கலாசாரமும் ஏற்பட்டிருக்குது.
லோக்., தேர்தலில் கை, கூட்டணி அல்லது தாமரை கூட்டணி போட்டியில் இருக்கும். ஆனால் வழக்கமா, அதில் வேட்பாளராக கோல்டு சிட்டிக் காரங்க இருக்க போவதில்லை. இதில் மாற்றம் எப்போ ஏற்படுமோ.