மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதி ரூ. 1.39 லட்சம் கோடி விடுவிப்பு
மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதி ரூ. 1.39 லட்சம் கோடி விடுவிப்பு
மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதி ரூ. 1.39 லட்சம் கோடி விடுவிப்பு
ADDED : ஜூன் 10, 2024 10:39 PM

புதுடில்லி: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருப்பதாவது, : நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக ரூ.25,069 கோடியும், பீஹார் மாநிலம் ரூ.14,056 கோடியும் , மத்திய பிரதேசம் ரூ.10,970 கோடியும் வரி பகிர்வு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ. 5,700 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில், மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்தது. இப்போது வெளியிடப்பட்டுள்ள நிதியைச் சேர்ந்து இதுவரை மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2,79,500 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.