Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/செந்தில் பாலாஜி பதவி பறிக்க முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் சுப்ரீம் கோர்ட் ஊர்ஜிதம்

செந்தில் பாலாஜி பதவி பறிக்க முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் சுப்ரீம் கோர்ட் ஊர்ஜிதம்

செந்தில் பாலாஜி பதவி பறிக்க முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் சுப்ரீம் கோர்ட் ஊர்ஜிதம்

செந்தில் பாலாஜி பதவி பறிக்க முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் சுப்ரீம் கோர்ட் ஊர்ஜிதம்

ADDED : ஜன 05, 2024 10:43 PM


Google News
புதுடில்லி:சிறையில் உள்ள தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், மின்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. இவர், 2011 - 16ல் அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முதல்வரின் பரிந்துரை இன்றி, அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் முடிவை, கவர்னர் தன்னிச்சையாக எடுக்க முடியாது.

இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவில் நாங்கள் உடன்படுகிறோம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us