பா.ஜ., தலைவர் நட்டாவுடன் சுதாகர் ஆலோசனை
பா.ஜ., தலைவர் நட்டாவுடன் சுதாகர் ஆலோசனை
பா.ஜ., தலைவர் நட்டாவுடன் சுதாகர் ஆலோசனை
ADDED : ஜன 31, 2024 07:39 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தல் சீட் எதிர்பார்க்கும் முன்னாள் அமைச்சர் சுதாகர், டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
காங்கிரசில் இருந்து, 2019ல் பா.ஜ.வுக்கு வந்த கே.சுதாகர், எடியூரப்பா அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது லோக்சபா தொகுதியில் போட்டியிட, சீட் எதிர்பார்க்கிறார். சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியை சுற்றி வந்து, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். சீட் உறுதி செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென டில்லி சென்றுள்ள சுதாகர், நேற்று பா.ஜ., தலைவர் நட்டாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். கர்நாடகாவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவரித்தார்.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
டில்லியில், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினேன். மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை கூறினேன். தேசிய தலைவராக நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த நட்டா, நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பா.ஜ.,வை கொண்டு சென்றுள்ளார்.
வெற்றிகரமாக கட்சியை முன்னடத்துகிறார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக, கர்நாடகாவில் இருந்து அவரது கையை பலப்படுத்த வேண்டும். 28 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வெற்றி பெற, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், ம.ஜ.த.,வுடனான கூட்டணி உட்பட, பல விஷயங்கள் குறித்து, நட்டா ஆலோசனை கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.