விபத்தில் 17 பற்களை இழந்த மாணவர் திடீர் தற்கொலை
விபத்தில் 17 பற்களை இழந்த மாணவர் திடீர் தற்கொலை
விபத்தில் 17 பற்களை இழந்த மாணவர் திடீர் தற்கொலை
ADDED : மார் 24, 2025 02:12 AM

சிக்கமகளூரு : கர்நாடகாவில் சாலை விபத்தில் 17 பற்களை இழந்த கல்லுாரி மாணவர், தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், புவன கோட்டே கிராமத்தில் வசித்தவர் விக்னேஷ், 18. இவர் கொப்பாலில் உள்ள ஐ.டி.ஐ., கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் விக்னேஷ் காயமடைந்தார். இதில், தன் 17 பற்களை அவர் இழந்தார்.
இதனால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பற்களை இழந்த பின், அவர் விரக்தியில் இருந்தார். அது மட்டு மின்றி அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதால், செலவும் அதிகமானது.
இதனால், விரக்தியில் இருந்தவர், நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.