Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை

ADDED : மே 10, 2025 03:33 AM


Google News
“அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறை உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே,” என, மத்திய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.

டில்லியில் அவர் நேற்று அளித்த பேட்டி:

நாட்டில் உள்ள பல பகுதிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இவை அனைத்தும் வதந்தியே. இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

பஞ்சாப்பில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த பற்றாக்குறையும் ஏற்படவில்லை. அங்கு போதுமானதை விட அதிகமாகவே பொருட்கள் கையிருப்பில் உள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேவையை விட, அதிக அளவிலேேய அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மக்கள் யாரும் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம். மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உணவை மறுபரீசிலனை செய்தது. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், அரிசி, கோதுமை, கொண்டைக்கடலை, பயறு வகைகள் போன்றவை தேவையை விட இரண்டு மடங்கு இருப்பது உறுதியானது.

பொய்யான செய்திகளை கேட்டு மக்கள் அச்சத்தில், அத்தியாவசியப் பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டாம். இது போன்ற சமயங்களில், பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us