ADDED : மே 10, 2025 03:36 AM

நாட்டிற்கு எதிராகவும், நம் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் உறுதியை குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. பொறுப்புமிக்க குடிமக்களாகிய நாம் அவற்றை புறக்கணிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்புங்கள்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
பதற்றத்தை தணிக்க வேண்டும்!
காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இந்தியா பதிலடி தந்தது. இந்த சூழலை உருவாக்கியது நாங்கள் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தினால், அவர்களுக்கு தான் நஷ்டம். எனவே பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
எச்சரிக்கை தேவை!
மக்கள் அனைவரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அல்லது தகவல்களை நம்ப வேண்டாம்; அதை பரப்ப வேண்டாம் என்று, வேண்டுகோள் விடுக்கிறேன். இதுபோன்ற வதந்திகள், நம் எதிரிகளால் பரப்பப்படுபவையாக இருக்கலாம். நாம், ராணுவத்துடன் துணைநிற்க வேண்டிய நேரம் இது.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி