Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லியில் புழுதிப்புயலுடன் மழை நுாலிழையில் தப்பிய ஸ்ரீநகர் விமானம்

டில்லியில் புழுதிப்புயலுடன் மழை நுாலிழையில் தப்பிய ஸ்ரீநகர் விமானம்

டில்லியில் புழுதிப்புயலுடன் மழை நுாலிழையில் தப்பிய ஸ்ரீநகர் விமானம்

டில்லியில் புழுதிப்புயலுடன் மழை நுாலிழையில் தப்பிய ஸ்ரீநகர் விமானம்

ADDED : மே 22, 2025 02:52 AM


Google News
புதுடில்லி: புதுடில்லியில் நேற்று மாலை திடீரென பலத்த புழுதிக்காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்ததால், ஏராளமான விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமானது. டில்லியிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட, 'இண்டிகோ' விமானத்தின் முகப்பு பகுதி ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தது.

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் வாட்டிய நிலையில், நேற்று மாலை புழுதிப்புயலை தொடர்ந்து மழையும் கொட்டியது. இரண்டு மணி நேரம் நீடித்த புழுதிப்புயல் மற்றும் மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. டில்லி விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடும் வருகையும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.

பாலம் மற்றும் சப்தர்ஜங் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு, 35 முதல் 79 கி.மீ., வரை பதிவானது.

டில்லியில் இருந்து 227 பயணியருடன் ஸ்ரீநகருக்கு நேற்று மாலை புறப்பட்ட இண்டிகோ விமானம் பலத்த காற்று மற்றும் மழையால் நடுவானில் ஆட்டம் கண்டது. விமானத்தின் முகப்பு பகுதியும் சேதமடைந்தது. இதையடுத்து விமானி அவசரமாக ஸ்ரீநகரில் தரையிறங்க அனுமதி கேட்டார். அது கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

டில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானம் 6இ 2142 நடுவானில் திடீரென ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டது. விமான ஊழியர்கள் ஆபத்துக்கால நெறிமுறைகளைப் பின்பற்றினர். விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தின் சேதம் குறித்து ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்ததும் விமானம் விடுவிக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us