Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/திருமணம் செய்து வைக்காத தாயை கொன்ற மகன் கைது

திருமணம் செய்து வைக்காத தாயை கொன்ற மகன் கைது

திருமணம் செய்து வைக்காத தாயை கொன்ற மகன் கைது

திருமணம் செய்து வைக்காத தாயை கொன்ற மகன் கைது

ADDED : பிப் 05, 2024 11:15 PM


Google News
கலபுரகி: தனக்கு திருமணம் செய்யவில்லை என்ற கோபத்தில், தாயை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

கலபுரகி, சிஞ்சோலியின், குஞ்சாவரம் கிராமத்தில் வசிப்பவர் ஷோபா, 45. கணவரை இழந்த இவர், தன் மகன் அனில், 25, உடன் வசிக்கிறார்.

மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், அவருக்கு திருமணம் செய்து வைக்க தாய் தயங்கினார். பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என, தினமும் தாயிடம் அனில் தகராறு செய்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகனை, ஷோபா கண்டித்தார்.

அப்போதும் திருமணம் விஷயமாக, தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த அனில், மரக் கட்டையால் தாயை சரமாரியாக தாக்கி, கொலை செய்தார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த குஞ்சாவரம் போலீசார், அனிலை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us