ADDED : பிப் 12, 2024 06:40 AM

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக, துமகூரு மாவட்டங்களில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சோமண்ணா தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
துமகூரு லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., பசவராஜு. இவருக்கு இம்முறை சீட் கிடைப்பது சிரமம். இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் மாதுசாமி சீட் கேட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த சோமண்ணாவை, பா.ஜ., மேலிடம் புதுடில்லிக்கு அழைத்து சமாதானம் செய்தது.
சிறிது காலம் அமைதியாக இருந்த அவர், துமகூரு லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்காக, இத்தொகுதியில் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், 'ஆஜர்' ஆகி விடுகிறார். பல்வேறு துறை பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து பேசி வருகிறார். இத்தொகுதியிலுள்ள சித்த கங்கா மடத்தின் தீவிர பக்தர். அந்த மடத்தில் எந்த நிகழ்ச்சி என்றாலும் ஆஜராகி விடுவார்.
தனக்கு எந்த காரியம் நடக்க வேண்டும் என்றாலும் அங்கு சென்று வணங்கிய பின் தான் காரியத்தை தொடருவார்.
அந்த அளவில் துமகூருவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டுமென்று, அத்தொகுதியில் சோமண்ணா, 'டென்ட்' போட்டு தீவிரமாக களத்தில் உள்ளார
- நமது நிருபர் -