Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குடிசைகளை அகற்ற திட்டம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

குடிசைகளை அகற்ற திட்டம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

குடிசைகளை அகற்ற திட்டம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

குடிசைகளை அகற்ற திட்டம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ADDED : ஜன 12, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:'டில்லியில் உள்ள அனைத்து குடிசைகளையும் அகற்ற, மத்திய பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது' என, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து, டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி சிங் ஆகியோர் கூறியதாவது:

டில்லியில் அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு, மாற்று இடம் வழங்கப்படுவதில்லை. இங்குள்ள அனைத்து குடிசைகளும், மனிதாபிமானமற்ற முறையில் இடிக்கப்படுகின்றன.

கடந்த 9ம் தேதி நடந்த கூட்டத்தில், டில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டில்லி மாநகராட்சி ஆகியவற்றுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து குடிசைகளையும் அகற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுந்தர் நர்சரி மற்றும் டில்லி பப்ளிக் பள்ளி ஆகியவற்றுக்கு இடையே இருந்த குடிசைகள், நவம்பர் மாதம் அதிரடியாக அகற்றப்பட்டன.

அங்கு வசித்த 1,500 பேருக்கு, மாற்று இடம் வழங்கவில்லை. அங்கு வசித்தவர்கள் தற்போது, சாலை ஓரங்களில் வசிக்கின்றனர். அதில் ஏராளமானோர், வீட்டு வேலை செய்வோர் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.

மற்ற இடங்களிலும், குடிசைவாசிகள், இரண்டு நாட்களில் காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us