சென்னை ரயில் தடம் புரண்டது ஆறு பயணியர் படுகாயம்
சென்னை ரயில் தடம் புரண்டது ஆறு பயணியர் படுகாயம்
சென்னை ரயில் தடம் புரண்டது ஆறு பயணியர் படுகாயம்
ADDED : ஜன 10, 2024 11:49 PM

ஹைதராபாத்: சென்னையில் இருந்து சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பயணியர் காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ், நேற்று காலை தெலுங்கானாவின் ஹைதராபாத் சென்றடைந்தது.
இந்த ரயில் கடைசி நிறுத்தமான ஹைதராபாதின் நம்பள்ளியில் உள்ள டெக்கான் ரயில் நிலையத்திற்குள் மெதுவாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயில் திடீரென நிறுத்தத்தை தாண்டி சென்றதால், முன்பதிவு செய்யப்பட்ட பயணியர் இருந்த எஸ் - 2, எஸ் - 3 மற்றும் எஸ் - 6 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் பெட்டிக்குள் விழுந்ததில் ஆறு பயணியர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்; காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரயில் தடம் புரண்டது ஏன் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.