Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கோலார் காங்.,சில் மீண்டும் 'குஸ்தி' வரிந்து கட்டிய சித்தராமையா - சிவகுமார் அணிகள்

கோலார் காங்.,சில் மீண்டும் 'குஸ்தி' வரிந்து கட்டிய சித்தராமையா - சிவகுமார் அணிகள்

கோலார் காங்.,சில் மீண்டும் 'குஸ்தி' வரிந்து கட்டிய சித்தராமையா - சிவகுமார் அணிகள்

கோலார் காங்.,சில் மீண்டும் 'குஸ்தி' வரிந்து கட்டிய சித்தராமையா - சிவகுமார் அணிகள்

ADDED : ஜன 01, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
கோலார் காங்கிரசில் மீண்டும் 'குஸ்தி' துவங்கி விட்டது. உணவுத்துறை அமைச்சர் கே.ஹெச். முனியப்பாவுக்கு எதிராக, முதல்வரின் சித்தராமையாவின் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் ரமேஷ் குமார் கோஷ்டியினர் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளனர்.

கோலார் லோக்சபா தொகுதியில், கோலார் மாவட்டத்தில் 6 தொகுதிகளும்; சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளும் என 8 தொகுதிகள் உள்ளன. இதில் சிந்தாமணி, கோலார், மாலுார், பங்கார்பேட்டை, தங்கவயல் என ஐந்து தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது.

இந்த லோக்சபா தொகுதியில், காங்கிரசின் கே.ஹெச். முனியப்பா அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், இவர் தோற்கடிக்கப்பட்டார். இவரை தோற்கடிக்க முனியப்பாவின் அதிருப்தியாளர்கள் பலரும் ஒருங்கிணைந்தனர். அதிருப்தியாளர்கள் 'கை' ஓங்கியது. முனியப்பா தோல்வியை தழுவினார்.

ஆனாலும் அரசியலில் 'பழம் தின்று கொட்டை' போட்ட முனியப்பா, மாநில அரசியலில் குதித்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், கோலார் - தனி தொகுதியில், காங்கிரசில் போட்டியிட ஆசைப்பட்டுள்ளார். இதை, அவரே வௌிப்படையாக தெரிவித்துள்ளார்.

*மீண்டும் கை கோர்ப்பு

கோலார் மாவட்டத்தில் முனியப்பா, மீண்டும் தலை துாக்க விடாமல் தடுக்க, அதிருப்தியாளர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து உள்ளனர், இதில் அவரது மகள் தங்கவயல் ரூபகலா தவிர, மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கை கோர்த்துள்ளனர். அதிருப்தியாளர்கள், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் களத்தில் இறங்கி உள்ளனர். இந்த பட்டியலில் முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமதுவும் அடங்குவார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போதே, கோலார் தொகுதியில் சித்தராமையாவை போட்டியிட வைக்க, ரமேஷ் குமார் கோஷ்டியினர் பெரிதும் முயற்சித்தனர். ஆனால் கட்சி மேலிடம் தடை விதித்தது. இத்தொகுதியில் அக்கட்சியின் கொத்துார் மஞ்சுநாத் வென்றார்.

கோலார் லோக்சபா தொகுதியில், மீண்டும் கே.ஹெச்.முனியப்பா போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்பதற்காக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை போட்டியிட வைக்க, ரமேஷ் குமார் கோஷ்டியினர் முயன்றனர். ஆனால் அவரோ சம்மதிக்கவில்லை.

தேடுதல் வேட்டை


அடுத்ததாக யோசித்த ரமேஷ் குமார் கோஷ்டியினர், புதிய வேட்பாளரை தேடும் முயற்சியில் களம் இறங்கினர். இதில் சிக்கியவர், மாலுாரின் தொட்ட ஷிவாராவை சேர்ந்த வெங்கடாச்சலா. இவரை கோலார் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தினர். அவரும் 'தயார்' என தெரிவித்துள்ளார்.

இவர், காங்கிரஸ் உயர் மட்ட குழுவில் பணியாற்றியவர். தேசிய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பல மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல் பட்டவர். மேலிடத் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக இருந்து வருகிறார். டில்லியில் தங்கி தொழில் நடத்தி வருகிறார்.

இவரை சந்தித்த, சீனிவாசப்பூரின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் குமார் தலைமையில் அமைச்சர் சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் மாலுார் நஞ்சேகவுடா, பங்கார்பேட்டை நாராயணசாமி, கோலார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில் குமார் உட்பட சிலர், புதுடில்லியில் வெங்கடாச்சலாவின் விருந்தினர் மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

கார்கேவுடன் சந்திப்பு


இவர்களின் சந்திப்புக்கு பின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, வெங்கடாச்சலா சந்தித்துள்ளார். அவரிடம் கோலார் தொகுதியில் போட்டியிட விரும்புவதை தெரிவித்துள்ளார்.

இத்தகவல் கோலார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வில் புதுமுகத்தை வேட்பாளராக்கியது போன்று காங்கிரசும் செய்வதாக தெரிகிறது.

இதன் மூலம் கோலார் தொகுதியில் காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் துவங்கி உள்ளது. இந்த மோதல் முற்றினால் தொகுதியை காங்கிரஸ் இழக்க வேண்டிய நிலை, மீண்டும் ஏற்படலாம் என்பதால் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இங்கும் மோதல்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா,- துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே கருத்து வேறுபாடு, மோதல்கள் உள்ளன. ஆனால் வௌி காட்டி கொள்ளவில்லை. இருவருமே, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவாளர்களை உருவாக்கி உள்ளனர்.உணவுத் துறை அமைச்சர் முனியப்பா, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர். கடந்த முறை லோக்சபா தேர்தலில் முனியப்பாவை தோற்கடித்த, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையிலான அணியினர், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள்.

\- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us