Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது; 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்

மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது; 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்

மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது; 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்

மணிப்பூரில் ஆயுத குவியல் சிக்கியது; 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்

ADDED : ஜூன் 14, 2025 01:43 PM


Google News
Latest Tamil News
இம்பால்: கலவரம் பாதித்த மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் பெரும் சதி செயல் தடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மணிப்பூரில் 5 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கபபட்டிருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு காவல் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.



மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 328 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன, இதில் SLR, இவற்றில் INSAS, துப்பாக்கிகள், கார்பைன்கள், MP5, LMG, AK-சீரிஸ், அமோகா, மோர்டார், பிஸ்டல்கள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்கள் அடங்கும். இது தவிர, ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் வெடிக்கும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் 151 எஸ்.எல்.ஆர் ரைபிள்கள், 65 இன்சாஸ் ரைபிள்கள், 73 பிற வகை ரைபிள்கள், 12 லைட் மெஷின் கன்கள், 6 ஏ.கே-சீரிஸ் ரைபிள்கள், 2 அமோகா ரைபிள்கள், ஒரு மோட்டார், 5 கார்பைன் துப்பாக்கிகள் அடங்கும்.


மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த போலீசார் தொடர் முயற்சி செய்து வருவதாகவும், இதன் காரணமாக பல முன்னெச்சரிக்கை எடுத்து வருவதாகவும், போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ;

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது சட்டவிரோத ஆயுதங்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us