ஆற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ஆற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ஆற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ADDED : ஜூன் 12, 2025 09:46 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்று நீரில் மூழ்கி பிளஸ்--2 மாணவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பெருமுடியூர் பகுதி சேர்ந்த முஜிப் ரஹ்மானின் மகன் முகமது நபி, 17. அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள, பாரதப்புழை ஆற்றில் குளிக்க நண்பர்களுடன் சென்றார். அப்போது திடீரென தாழ்வான பகுதியில் சிக்கிய முகமது நபி நீரில் முழ்கினார். அவரது நண்பர்களின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு வந்து, நீண்ட நேரம் தேடியும் அவரது உடலை மீட்க முடியவில்லை. தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தேடுதலில் ஈடுபட்டு, மதியம் 12:00 மணிக்கு அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து, பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.