சரத்பவார் கட்சி நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி
சரத்பவார் கட்சி நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி
சரத்பவார் கட்சி நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி
UPDATED : ஜூலை 09, 2024 02:19 AM
ADDED : ஜூலை 09, 2024 02:15 AM

புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி, சரத்பவார் தலைமையிலான கட்சி தேர்தல் நன்கொடை வசூலித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் இவரது தலைமையில் இருந்த தேசியவாத காங்., கட்சி கடந்தாண்டு ஜூலை மாதம் இரண்டாக பிளந்தது. இதில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங். கட்சிதான் உண்மையானது என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அஜித்பவார் பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசில் இடம் பெற்று துணை முதல்வராக உள்ளார்.
இதையடுத்து சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு தேசியவாத காங்., சரத் சந்திரபவார் எனவும் தேர்தல் ஆணையம் பெயர் அளித்துள்ளது.
இந்நிலையில் இம்மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., சரத் சந்திரபவார் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.