உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுக்கு சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள்
உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுக்கு சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள்
உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுக்கு சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள்
ADDED : மே 31, 2025 03:42 AM
டேராடூன்: உத்தராகண்ட் தலைமை செயலக அதிகாரிகளுக்கு சமஸ்கிருதம் பேச கற்றுத் தருவதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தராகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு ஹிந்திக்கு அடுத்து இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. சமஸ்கிருத மொழியை வளர்க்க, அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
உத்தராகண்டின் 13 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு சமஸ்கிருதத்தை அன்றாட உரையாடல்களில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
கிராமவாசிகள் சமஸ்கிருதத்தில் பேசுவதற்கும், வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிஷதங்களை பயன்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக உத்தராகண்ட் சமஸ்கிருத அகாடமி மற்றும் சமஸ்கிருத கல்வித் துறை மாநில அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த துறை சார்பில் தலைமைச் செயலக அதிகாரிகள் சமஸ்கிருதத்தில் பேச வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளனர்.
இதற்காக தலைமை செயலக வளாகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு முகாம்கள் போடப்பட்டுள்ளன. ஜூன் 12 வரை இங்கு அதிகாரிகள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படும்.