கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
கேரளாவில் ஆளுங்கட்சி தோல்வி... குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

நிலம்பூர்
கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத் ஆரம்ப முதலே முன்னிலையில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 11,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார். மொத்தமாக அவர் 77,737 ஓட்டுகளை வாங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 66,660 ஓட்டுகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட அன்வர் 19,760 ஓட்டுகளையும் பெற்றனர். பா.ஜ., 8.648 ஓட்டுகளை மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
லூதியானா மேற்கு
டில்லி சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஆம்ஆத்மி போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாகும். இந்தத் தொகுதியை மீண்டும் கைவசப்படுத்த ஆம்ஆத்மி போராடியது. அதன்படி, ஆம்ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 30,237 ஓட்டுகளைப் பெற்ற வெற்றி பெற்றார். 8,697 ஓட்டுகள் வித்தியாசமாகும். காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூசன் அஷூ 21,540 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் ஜீவன் குப்தா 17,435 ஓட்டுகளையும் பெற்றனர்.
குஜராத்
விசாவதர் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பூபேந்திர பயானி, கடந்த 2023ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்து விட்டார். எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பா.ஜ., வென்றதே இல்லை. எனவே, இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கிர்த்தி படேலை பா.ஜ., களமிறக்கியது. ஆம்ஆத்மி சார்பில் கோபால் இதாலியாவை நிறுத்தியது.
கலிகஞ்ச்
திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-, நசாருதின் அகமது மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் மொத்தம் 56,566 ஓட்டுகளைப் பெற்றார். பா.ஜ., வேட்பாளர் ஆஷிஷ் கோஷை (25,412 ஓட்டுகள்)விட 31,154 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கபில் உதின் 19,102 ஓட்டுகளை பெற்றார்.