Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.439 கோடி கடன் மோசடி பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

ரூ.439 கோடி கடன் மோசடி பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

ரூ.439 கோடி கடன் மோசடி பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

ரூ.439 கோடி கடன் மோசடி பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

ADDED : ஜன 08, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு; கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன், வட்டியை திரும்ப செலுத்தாமல் 439 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில், கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி மேலாளர் ராஜண்ணா அளித்த புகார்:

பெலகாவி கோகாக் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, 63. கடந்த 2013 முதல் 2017 வரை கோகாக்கில் சவுபாக்யா லட்சுமி என்ற பெயரில், சர்க்கரை ஆலை துவங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும், கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கியில் இருந்து 232.88 கோடி ரூபாய் கடன் வாங்கினார்.

ஆனால் கடனுக்கு உரிய வட்டி, அசலை திரும்ப செலுத்தவில்லை. 2023ம் ஆண்டு நிலவரப்படி வட்டி, அசல் என, 439.7 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. கடனை திரும்ப செலுத்தாமல் ரமேஷ் ஜார்கிஹோளி, சர்க்கரை ஆலையின் மேலாளர்கள் சங்கர், வசந்த் பாட்டீல் ஆகியோர் மோசடி செய்து விட்டனர்.

கடன் வாங்கும் போது, சர்க்கரை ஆலையின் தலைவர் பொறுப்பில் இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி தற்போது அந்த பதவியில் இல்லை. இதுகுறித்து வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. வங்கிக்கு 439.7 கோடி ரூபாய் மோசடி செய்த, மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

அந்த புகாரின்படி, ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட 3 பேர் மீதும், வி.வி.புரம் போலீசார் மோசடி உட்பட, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

துணை முதல்வர் சிவகுமாருக்கும், ரமேஷ் ஜார்கிஹோளிக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் இந்த வழக்கில், ரமேஷ் ஜார்கிஹோளியை கைது செய்ய, காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படலாம்.

கடந்த பா.ஜ., ஆட்சியில் ரமேஷ் ஜார்கிஹோளி அமைச்சராக இருந்தார். ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால், அமைச்சர் பதவி இழந்தார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவானது. ஆனாலும் அவரை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us