ரூ.1.52 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கைது
ரூ.1.52 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கைது
ரூ.1.52 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜன 31, 2024 07:38 AM

பெங்களூரு : பெங்களூரில் 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வெளிநாட்டினர் உட்பட 7 பேர், கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு புலிகேசிநகர், பானஸ்வாடி, ஹுலிமாவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், பெங்களூரு நகரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, ஏழு பேரை கைது செய்தனர்.
கவுதம், அபிஷேக் ஜாதவ், ரித்திக் ராஜ், ஷேக் முகமது அர்பாஸ் மற்றும் மூன்று பேர் வெளிநாட்டினர்.
இவர்களிடம் இருந்து 219 எக்ஸ்டஸி மாத்திரைகள், 505 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல், 130 கிராம் சரஸ், ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1.52 கோடி ரூபாய்.
இவர்கள் 7 பேரும் 'டார்க்வெப்' இணையம் மூலம், போதைப் பொருட்களை வாங்கி, பெங்களூரில் அதிக விலைக்கு விற்று வந்தனர்.
குறிப்பாக மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள் தான் இவர்களின் குறியாக இருந்து உள்ளது.
பெங்களூரில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.