புதிதாக 18 வழித்தடங்களில் பஸ் சேவைக்கு பரிந்துரை
புதிதாக 18 வழித்தடங்களில் பஸ் சேவைக்கு பரிந்துரை
புதிதாக 18 வழித்தடங்களில் பஸ் சேவைக்கு பரிந்துரை
ADDED : செப் 13, 2025 01:00 AM
புதுடில்லி:'டிரான்ஸ் யமுனா' வழி பாதையில் கூடுதலாக, 18 வழித்தடங்களை, டில்லி ஐ.ஐ.டி., தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை பஸ் சேவை இல்லாத பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு பஸ் சேவை வழங்க, டில்லி ஐ.ஐ.டி., சார்பில் பல மாதங்களாக கண்காணிப்பு பணிகள் நடந்தன.
அதையடுத்து, டில்லியில் உள்ள டிரான்ஸ் யமுனா வழி பாதையில் கூடுதலாக, 18 வழித்தடங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் இந்த புதிய திட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அவரின் உத்தரவு படி மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் புதிதாக, பல பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
டில்லி ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ள அந்த வழித்தடங்களில் விரைவில் பஸ் சேவை துவக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.