'இந்திய சுகாதார திட்டத்தை உலக நாடுகளுடன் பகிர தயார்'
'இந்திய சுகாதார திட்டத்தை உலக நாடுகளுடன் பகிர தயார்'
'இந்திய சுகாதார திட்டத்தை உலக நாடுகளுடன் பகிர தயார்'
ADDED : மே 21, 2025 09:38 PM
புதுடில்லி:''இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை, உலக நாடுகளுடன் குறிப்பாக, உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த உலக சுகாதார கூட்டமைப்பின், 78-வது அமர்வில், வீடியோ கான்பரஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
ஆரோக்கியமான எதிர் காலம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தும் அமையும். உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்.
இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. இந்த திட்டம் சமீபத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. எங்களிடம் ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் உள்ளன. அவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை பரிசோதித்து கண்டறிகின்றன.
ஆயிரக்கணக்கான பொது மருந்தகங்கள் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் உயர்தர மருந்துகளை வழங்குகின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் எவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொள்கிறோம் என்பதில் தான் உலகின் ஆரோக்கியம் உள்ளது.
உலகளாவிய தெற்கு பகுதி நாடுகள், குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகின்றன. எங்கள் கற்றல்களையும், சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தெற்கு பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.