விமான நிலையத்தில் ராமர் பாடல் மைசூரு மாணவர்கள் உற்சாகம்
விமான நிலையத்தில் ராமர் பாடல் மைசூரு மாணவர்கள் உற்சாகம்
விமான நிலையத்தில் ராமர் பாடல் மைசூரு மாணவர்கள் உற்சாகம்
ADDED : பிப் 05, 2024 11:13 PM

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், இசை பள்ளியை சேர்ந்தவர்கள் பாடும் ராமர் பாடல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், மைசூரை சேர்ந்த ரகுலீலா ஸ்கூல் ஆப் மியூசிக் மாணவர்கள், ஆசிரியர்கள் ராமரை பற்றிய பாடலை, 1.50 நிமிடம் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை ஏர் மார்ஷல் அனில் சோப்ரா, தன் டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், சுமார் 50 பெண்கள், சில ஆண்கள் விமான நிலையத்திற்குள் நின்று, பாடல் பாடினர். இவர்கள் அனைவரும் அயோத்திக்கு போவதாக தெரிகிறது' என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரவி, தனது சமூக வலைளத்தில், 'சனாதன தர்மத்தையும், அதன் புகழ்பெற்ற கலாசாரத்தையும் பெருமையுடன் முன்வைத்த எங்கள் பெண் சக்திக்கு வணக்கம். 'ஜெய் ஸ்ரீராம், ராமராஜ்யம் வந்துவிட்டது' என குறிப்பிட்டு உள்ளார்.
அதே வேளையில், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் ஒரு அமைதியான விமான நிலையம். இங்குள்ள பயணியருக்கு இரைச்சல் இல்லாத மற்றும் அமைதியான பயண அனுபவம் ஏற்பட வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தவர்களை கைது செய்ய வேண்டும்' என சிலர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விமான நிலையத்தில் இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதித்தால், அனைத்து மதத்தினரும் இதை செய்ய துவங்குவர்' எனவும் சிலர் பதிவிட்டு உள்ளனர்.