மதுபோதையில் தகராறு ராஜஸ்தான் இளைஞர் கொலை
மதுபோதையில் தகராறு ராஜஸ்தான் இளைஞர் கொலை
மதுபோதையில் தகராறு ராஜஸ்தான் இளைஞர் கொலை
ADDED : ஜூன் 12, 2025 07:38 PM
புதுடில்லி:குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி ஹைதர்பூர் என்ற இடத்தில் வசிக்கும் லால்ஹிரத்புயா என்ற மிசோரம் நபர், அவரது நண்பரான, ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற இடத்தை சேர்ந்த பர்காஷ், 26, என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவையும் தாண்டி, நேற்று அதிகாலை வரை, அவர்கள் மது அருந்தினர்.
அப்போது அவர்களுடன், பெண் ஒருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளார். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் இளைஞர் தாக்கியதில், மிசோரம் நபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் வெளியே சென்றிருந்த அந்த பெண், உள்ளே நுழைந்த போது, ராஜஸ்தான் மாநில இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு, இறந்து கிடந்தார். அவரை கொன்ற மிசோரம் நபர், அருகில் கத்தியுடன் நின்றிருந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், கொலை தொடர்பாக மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவரையும், அந்த பெண்ணையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.