போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிரபல கொள்ளையன் கைது
போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிரபல கொள்ளையன் கைது
போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிரபல கொள்ளையன் கைது
ADDED : ஜூன் 12, 2025 07:40 PM
புதுடில்லி:டில்லியின் நஜப்கார் என்ற இடத்தில், காலா ஜத்தேரி கும்பலை சேர்ந்த, துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் நபரை, போலீசார் சுட்டு பிடித்தனர்.
டில்லியின் நஜப்கார் என்ற பகுதியில் நில மோசடி மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற பல வழக்குகளில் தொடர்புடைய சுஹைல் என்ற ஜக்கி, 21, என்பவர், டூ - வீலரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு, போலீசார் விடுத்த எச்சரிக்கையை மதிக்காமல், கைத்துப்பாக்கியை துாக்கிய ஜக்கி மீது, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவரும் சுட்டார். எனினும், போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜக்கியை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
வலது காலில் படுகாயம் அடைந்த ஜக்தி, ஜாபர்பூர் கலன் என்ற இடத்தில் உள்ள ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இடம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தன் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்த ஜக்கிக்கு, தாதா காலா ஜத்தேரி கோஷ்டியை சேர்ந்த ஜிதிந்தர் என்ற மோனுவுடன் பழக்கம் ஏற்பட்டு, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்துள்ள ஜக்கியுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார் என்ற விபரத்தை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.