பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
பாக்., தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்
ADDED : மே 25, 2025 03:53 AM

பூஞ்ச்: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, நம் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், நம் நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதில், ஜம்மு - காஷ்மீரில் எல்லையோரம் வசித்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
கடந்த 7 - 10ம் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் ஜம்மு - காஷ்மீரில் 28 பேர் பலியாகினர். இதில், 13 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்சில், பாதிப்புக்குள்ளான பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் - எம்.பி.,யுமான ராகுல் நேற்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ராகுல் கூறுகையில், ''பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலால், ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் படையினர், மக்களின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். அங்கு வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தேன்,'' என்றார்.