பள்ளிகளில் வெறிநாய்க்கடி விழிப்புணர்வு முகாம்
பள்ளிகளில் வெறிநாய்க்கடி விழிப்புணர்வு முகாம்
பள்ளிகளில் வெறிநாய்க்கடி விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 01, 2025 09:45 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, நெல்லியாம்பதி பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் வெறிநாய்க்கடி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே வன எல்லையோரத்தில் நெல்லியாம்பதி உள்ளது. இங்கு, சீதார்குண்டு, சந்தராமலை, போத்துப்பாறை, போளச்சிறக்கல் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்பம் பள்ளிகளில், நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மையம் சார்பில், வெறிநாய்க்கடி விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாம்களில், சுகாதார ஆய்வாளர்கள் வெறிநாய்க்கடி குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.