Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ADDED : ஜூலை 01, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஒரு மாத ஊதியம்( அதிகபட்சம் ரூ.15 ஆயிரம்) வழங்கப்படும். கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தி துறையினருக்கு இந்தத்திட்டம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி முதல்முறையாக வேலைக்கு சேர்பவர்களை மையமாக கொண்டது. இரண்டாவது பகுதி உரிமையாளர்களை மையமாக கொண்டது.

இதன்படி,* இபிஎப்ஓ அமைப்பில் பதிவு செய்த முதல்முறை ஊழியர்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15 ஆயிரம் வரை ஒரு மாத இபிஎப்ஓ சம்பளத்தை அரசு வழங்கும்.

* ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்களும் இதற்கு தகுதி பெறுவார்கள்.

* அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்களை கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும்

* ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பணியாளருக்கும் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் வரை உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படம்

* உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்

* உற்பத்தி துறையை பொறுத்தவரை ஊக்கததொகை 3வது மற்றும் 4வது ஆண்டுக்கும் நீட்டிக்கப்படும். இந்த திட்டத்தின் நன்மைகள் 2025 ஆக.,1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு பொருந்தும்

* இபிஎப்ஓ.,வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்( 50 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள்) கூடுதலாக 2 ஊழியர்களையும் 50 அல்லது அதற்கு மேல் உள்ள நிறுவனங்கள் கூடுதலாக 5 ஊழியர்களையும் தேர்வு செய்யலாம்.

இதன் மூலம் உரிமையாளர்கள் கூடுதலாக 2.60 கோடி கூடுதல் வேலைவாயப்புகளை உருவாக்க தூண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us