பா.ஜ.,வில் ராஜ்யசபா 'சீட்' புனித் மனைவி மறுப்பு
பா.ஜ.,வில் ராஜ்யசபா 'சீட்' புனித் மனைவி மறுப்பு
பா.ஜ.,வில் ராஜ்யசபா 'சீட்' புனித் மனைவி மறுப்பு
ADDED : பிப் 24, 2024 03:57 AM

பெங்களூரு : ராஜ்யசபா தேர்தலில், திரைப்பட தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமாரை களமிறக்க, பா.ஜ., முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, சந்திரசேகர், நாசிர் ஹுசேன், பா.ஜ.,வின் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ல் முடிகிறது. இந்த இடங்களுக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடக்கவுள்ளது.
காங்கிரஸ் சார்பில், நாசிர் ஹுசேன், சந்திரசேகர், அஜய் மாகன், பா.ஜ., சார்பில் நாராயண கிருஷ்ணாச பந்தகே ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது வேட்பாளராக குபேந்திர ரெட்டியை ம.ஜ.த., களமிறக்கியுள்ளது.
இதற்கிடையில் ராஜ்யசபா தேர்தலில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமாரை களமிறக்க பா.ஜ., முயற்சித்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், தேர்தலில் போட்டியிட அஸ்வினி புனித்ராஜ்குமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக பா.ஜ., தலைவர்கள், அஸ்வினியை சந்தித்து ராஜ்யசபா தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அப்போது அவர், 'எங்கள் குடும்பம் ஆரம்பத்தில் இருந்தே, அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளது. எனவே என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது' என கூறிவிட்டார். அதன் பின்னரே, நாராயண கிருஷ்ணாச பந்தகேவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.