Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புல் அவுட்

புல் அவுட்

புல் அவுட்

புல் அவுட்

ADDED : ஜன 08, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
தேவையற்ற விவாதம்

லோக்சபா தேர்தலில் போட்டியிட, எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் என் மூத்த மகனுக்கு விருப்பம் உள்ளது. நான் காங்கிரசின் விசுவாசமான தொண்டர். எனக்காக எதுவும் கேட்டது இல்லை. பா.ஜ.,வில் இருக்கும் முத்தேஹனுமே கவுடாவை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, 'சீட்' கொடுக்கும் பரிதாபம் கட்சிக்கு ஏற்படவில்லை. முத்தேஹனுமே கவுடா, சோமண்ணா ஆகியோர் காங்கிரசுக்கு வருவர் என்ற, விவாதம் தேவையற்றது.

- ஜெயசந்திரா

கர்நாடக அரசின் டில்லி பிரதிநிதி

விழிப்புணர்வு மாநாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த கோரி, வரும் 28ம் தேதி நடக்கும், விழிப்புணர்வு மாநாட்டிற்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை அழைத்து உள்ளோம். மாநாட்டில் 8 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கிறோம். சுரண்டப்பட்ட சமூகங்கள் வளர்ச்சிக்காக, அம்பேத்கர் அரசியலமைப்பு உருவாக்கினார். இதை சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

- ராமசந்திரப்பா

தலைவர், கர்நாடகா சுரண்டப்பட்ட சமூகம்.

மரக்கன்றுகள் நட வேண்டும்!

மைசூரு மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். 'நரேகா' திட்டத்தின் கீழ், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். பள்ளிகளில் மைதானம் அமைக்கும் பணிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2021 - 2022ம் நிதி ஆண்டில், 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

- செல்வகுமார்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி

மைசூரு மாவட்ட பொறுப்பாளர்

அமைச்சர் பதவி கிடைக்கும்

நடப்பாண்டு ஜூலையில், அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டால், என்னை அமைச்சராக்குவதாக முதல்வர் சித்தராமையா, வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் ஜூலையில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியாது.

எனக்கு அமைச்சர் வழங்கலாம் அல்லது வழங்காமலும் போகலாம். ஆனால் நான் அமைச்சராவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என, கூற முடியாது. சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.

- பசவராஜ் ராயரெட்டி

முதல்வரின் நிதி ஆலோசகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us