மூணாறுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி மாணவி பலி
மூணாறுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி மாணவி பலி
மூணாறுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி மாணவி பலி
ADDED : மே 10, 2025 02:48 AM

மூணாறு:பெற்றோருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி இறந்தார்.
புதுச்சேரி தவளைகுப்பம் தானம் பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ- பரிமளம் தம்பதியினர் மகள் பர்வதவர்த்தினி 15, மகன் விஸ்வா உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் இங்கு காலனி செல்லும் ரோட்டில் தனியார் விடுதியில் தங்கினர்.
இரவு நகரில் மையப்பகுதியில் உள்ள சைவ ஓட்டலில் அனைவரும் உணவு உண்டு விட்டு அறைக்குச் சென்றனர்.
இரவு 11:00 மணிக்கு பர்வதவர்த்தினிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை பெற்றோர் உள்ளிட்டோர் பெரிது படுத்தாமல் துாங்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சூரிய உதயம் பார்க்க முடிவெடுத்து அதிகாலை 5:00 மணிக்கு பர்வதவர்த்தினியை எழுப்பிய போது சலனமற்ற நிலையில் கிடந்தார்.
உடனே அவரை டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பர்வதவர்த்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் தேர்வு எழுதி விட்டு முடிவுக்கு காத்திருந்தார்.
மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.