ஆப்பரேஷன் சிந்துார் குறித்து சர்ச்சை பதிவு மார்க்சிஸ்ட் பஞ்சாயத்து தலைவி மீது புகார்
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து சர்ச்சை பதிவு மார்க்சிஸ்ட் பஞ்சாயத்து தலைவி மீது புகார்
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து சர்ச்சை பதிவு மார்க்சிஸ்ட் பஞ்சாயத்து தலைவி மீது புகார்
ADDED : மே 10, 2025 02:49 AM
திருவனந்தபுரம்:ஆப்பரேஷன் சிந்துார் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை முகநுாலில் பதிவிட்ட மார்க்சிஸ்ட் பஞ்சாயத்து தலைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கம் செய்தார்.
காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துாரை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கக்கோடி பஞ்சாயத்து தலைவராக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் ஷீபா தனது முகநுால் பக்கத்தில் 'தேசிய எல்லைக்கு அப்பால் அவர்கள் மனிதர்கள்.
அவர்களுக்கு உணர்வுகளும் எண்ணங்களும் உள்ளன' என்று கூறியிருந்தார்.
இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறி அவர் மீது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நிகால் கோழிக்கோடு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஷீபா தனது கருத்தை முகநுால் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.