திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை
திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை
திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை
ADDED : ஜூன் 09, 2024 02:44 PM

புதுடில்லி: ‛‛ அரசில் கவனம் செலுத்துவதுடன், திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு இன்று இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறது. புதிய அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, தனது வீட்டில் தேஜ கூட்டணி எம்.பி.,க்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில், மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், மனோகர்லால் கட்டார், எல்.முருகன், குமாரசாமி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவரும் அரசில் கவனம் செலுத்தி, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும். அமைச்சராக பதவியேற்றதும் துறை ரீதியிலான பணிகளில் கவனம் செலுத்தி, முதல் 100 நாளில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை அமல்படுத்துங்கள். இவ்வாறு மோடி பேசினார்.
மத்திய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்து பேசுவதை 2014 முதல் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.